Friday, January 21, 2011

சிரிப்பு தரும் சிறப்பு..


.
சிரிப்பதால் என்ன பயன் என்று கேட்கும் நரசிம்மராவுக்குப் பக்கத்து வீட்டுக்காரராக நீங்கள் இருந்தால், உங்களுக்காக ஒரு பிரிஸ்கிரிப்ஷன் இது...

  நன்றாக வாய்விட்டுச் சிரிப்பது உங்கள் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்கிறது!
 இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறைகின்றன!
  மன அழுத்தம் குறைவதற்கான மிகச் சிறந்த மருந்து!
 நோய் எதிர்ப்புத் திறனை அதிகமாக்குகிறது!
 வெள்ளை செல்களை அதிகப்படுத்துவதன் மூலம், சிரிப்பு இயற்கையான வலி நிவாரணியாகத்
  திகழ்கிறது!
  ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை மேம்படுத்துகிறது!
 தொண்டைப் பகுதி தசைகளுக்குச் சிறந்த பயிற்சியாக இருப்பதால், இரவில் குறட்டைவிடும் 
  வழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது!
 ஆர்த்தரைடிஸ், ஒவ்வாமை, பார்க்கின்ஸன்ஸ் நோய் போன்றவை ஏற்படுவதற்கான
  வாய்ப்புகளைக் குறைக்கிறது!
  தசைகளை ரிலாக்ஸ் செய்கிறது!
  மன அழுத்தம் ஏற்படக் காரணமாக இருக்கும் ஹார்மோன்களின் சுரப்பைக் கட்டுப்படுத்துகிறது!

                                                                                                           -  நன்றி ஆனந்த விகடன்