ஞாலத்திலிருந்து மூலத்தை தேடும் விஞ்ஞானிகளும், மூலத்திலிருந்து ஞாலத்தை தொடும் மெய்ஞ்ஞானிகளும் ஒன்றைத்தான் கிராவிட்டி என்றும் கட்வுள் என்றும் சொல்லுகிறார்கள். இர்ண்டுமே உருவமற்றவை, காணமுடியாதது; ஊகிக்கலாம், உணரலாம், ஆனால் இனி வரும் காலம் தான் அதை நிரூபிக்கும்.
விஞ்ஞானம் உலகெங்கும் ஒன்று தான். அதன் கருத்துக்கள் புதிய கண்டு பிடிப்புக்களால் மாறிக்கொண்டேயிருக்கின்றன. புதிய மாற்றங்கள் நிரூபிக்கப்பட்டு, ஒப்புக்கொள்ளப்பட்டு, அது ஒரு கால கட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. விஞ்ஞானம் மனித வாழ்விற்க்கு அவன் வாழ்க்கை தரம் உயர்த்துவதற்க்கு தந்த பொருட்கள், வசதிகள் ஏராளம். எனவே மக்கள் இன்று கலை நுட்பத்தை விட விஞ்ஞான தொழில் நுட்பத்தை விரும்புவதில் வியப்பேதுமில்லை.
மெய்ஞ்ஞானம் தந்த கடவுள்கள் ஏராளம். காற்று ஒன்று தான், சூரியன் ஒன்று தான், நீரும் ஒன்று தான், நிலமும் ஒன்று தான், ஆனால் கடவுள் மட்டும் ஏன் பலப்பல? கடவுளைப்பற்றி ஆராய்ந்த சித்தர்கள், அறிஞர்கள், தத்துவ ஞானிகள் எல்லோரும் கடவுள் ஒன்றுதான் என்கிறார்கள். பிறகு இன்னும் ஏன் இந்த குழப்பம்? இதை தெளிவாக்க விஞ்ஞானம் தான் வழி; ஏனென்றால் விஞ்ஞானத்தை உலகம் ஒப்புக்கொள்கிறதே. அந்த வழியில் வேதாத்திரி மகரிஷி அவர்கள் நியூட்டன் தந்த கிராவிட்டியை புரட்டிப்போட்டு உண்மை கிராவிட்டி என்ன என்பதையும், அதுவே தான் கடவுள் என்ற கருத்தையும் விஞ்ஞான அணுகு முறையோடு உலகில் உள்ள அனைத்து அறிஞர்கள் முன் வைக்கிறார்.
பிரபஞ்ச ஒருங்கிணைப்பு ஆற்றல் - கிராவிட்டி விஞ்ஞான கண்டுபிடிப்புகள் ஒன்று,கருத்து அனுமானங்களாகவோ (Axiom) அல்லது பரிசோதனைகூடத்தில் (Experiment) நிரூபிக்கப்பட்டதாகவோ இருக்கும். கெப்லர் தந்த பரிசோதனைகளை வைத்து நியூட்டனின் கிராவிட்டி அனுமானங்கள் அமைந்தது.
அது பிரபஞ்சத்தை நான்காக தொட்டது. அது பொருள், சக்தி, வெளி, காலம். இதையே வேதாத்திரி காலம், பருமன், தூரம், வேகம் என்ற நான்கிலே தான் விஞ்ஞானம் அடக்கம் என்று கூறினார்.பின் வந்த ஐன்ஸ்டைன் அந்த நான்கை இரண்டாக்கினார். பொருளும் சக்தியும் வேறு அல்ல ஒன்று தான்; அது போல வெளியும் காலமும் வேறு அல்ல ஒன்று தான்;வேதாத்திரி அவர்கள் மேலும் ஒரு படி கடந்து, எல்லாமே ஒன்று தான், அது தான் கிராவிட்டி, கடவுள் என்கிறார்.
இதற்கு வேதாத்திரி அவர்கள் இரண்டு கோட்பாடுகளை நம் முன் வைக்கிறார்
1. சுத்த வெளி:- பிரபஞ்சத்துக்கு உள்ளேயும் வெளியேயும் இருப்பாக இருப்பது. எல்லையற்ற தன்னிறுக்க சூழ்ந்தழுத்தும் ஆற்றலையும், அதன் இயக்க அறிவையும் உள்ளடக்கியது. காலம் என்ற ஊடகத்தின் வழியே மாற்றங்களை தருவது. சுத்த வெளி இறுக்குவது. (பருப்பொருட்களை மறை பொருட்களாக மாற்றுவது)
2. சுத்தும் வெளி:- சுத்த வெளி தன்னைத்தானே இறுக்கியும் அழுத்தியும் சின்ன சின்ன நேர் எதிர் விசையாகி, மிக நுண்ணிய சுழல் களங்களை உருவாக்கின்றது. இதுவே பிரபஞ்சத்தின் முதல் பொருள்.
கோடிக்கணக்கான இந்த நுண்ணிய சுழல் களங்கள், துகள்கள் என்று அழைக்கப்ப்ட்டது. துகள்களின் வேக வேறுபாட்டிற்க்கேற்ப அவைகள் இணையவும் பிரியவும் ஆரம்பித்தன.இணைந்தவை மூலகங்கள் ஆயின. பிரிந்தவை காந்த அலைகளாயின. இறுக்கம் தாளாத சுத்த வெளி தன்னைத்தானே சுத்தும் வெளியானது. சுத்தும் வெளி விலக்குவது. (மறை பொருட்களை பருப்பொருட்களாக மாற்றுவது)
பிரபஞ்சம் என்னும் பொருள் = ( சுத்த வெளி + சுத்தும் வெளி ) = ( இறுக்கும் ஆற்றல் + விலக்கும் ஆற்றல் ) இரு எதிர்மறை ஆற்றல்களின் தொகுப்பே பொருள்.
இயற்கை, வெட்ட வெளி, இறைவன், கடவுள், பிரம்மம், கிராவிட்டி, ஆல்மைட்டி, ஒருங்கிணைந்த ஆற்றல் எல்லாமே ஒன்றைத்தான் குறிப்பிடுகிறது.
கிராவிட்டி என்பது ஒன்று - அது தூய, எல்லாம் வல்ல, எங்கும் நிறைந்த, ஊடுறுவும், மற்றும் ஊடுருவிக்கொள்ளும், எல்லாம் அறிந்த, த்ன்னதிர்வு கொண்ட, பிரபஞ்ச மாற்றங்களை தந்துகொண்டேயிருக்கும் ஒன்று.
கிராவிட்டி, விண் வெளியிலுள்ள எல்லா நட்சத்திரங்களுக்கும், கோள்களுக்கும் ஒரு ந்ல்லிணக்கத்தை தருகிறது என்றால், அதை புரிந்து கொண்ட மனித இனத்திற்க்கு, அந்த அறிவு, ஏன் நல்லிணக்கத்தை தர முடியாது?
சிந்தியுங்கள். வாழ்வை வளமாக்கி வாழ்வோம், வாழ வைப்போம்.
சொல்லால் மட்டும் நம்பாதே, சுயமாய் சிந்தித்தே தெளிவாய் - வேதாத்திரி மகரிஷி
For more details or to clarify:
Visit: www.glowhy.org
Write: profdr.madhavan@gmail.com