Monday, September 5, 2011

கருமைய தத்துவம்

 - 1

சீவன் என்றால் எட்டு இருக்க வேண்டும்;
ஒன்று குறைந்தாலும் அது சீவனாகாது.
அந்த எட்டு: உடல், உயிர், சீவகாந்தம், கரு மையம், மூளை, உள்ளம், மனம், புலன்கள்.
கரு என்பது, ஒரு உயிர் / சீவகாந்தம் / வித்துவை குறிப்பதாகும்.

மையம் என்பது என்ன ? அது ஒரு புள்ளியா, வட்டமா, பொருளாக இருப்பதா, கற்பனையாக இருப்பதா. டெல்லி இந்தியாவின் மையம், சென்னை தமிழ் நாட்டின் மையம், இதயம் இரத்த ஓட்டத்தின் மையம்.

ஒரு பொருளிலே இருக்கும் மையம் - புவி ஈர்ப்பு மையம்என்பார்கள், இந்த மையம் எதை / எதற்கு குறிக்கிறது? இயற்பியலில்சொல்வது: புவி ஈர்ப்பு மையத்தில் தான், அந்தப்பொருளின் எடையனைத்தும் இருப்பதாக கணிப்பு.

அது போல கருவின் மையத்தில் தான், அந்தக் கருவின் ஆதி முதல் தொடங்கிய சரித்திரமே அடங்கி இருக்கிறது.
வித்து - மரத்தின் ஆதாரம்.
கரு - உங்கள் குணத்தின் ஆதாரம்.
 - 2
கருமையத்தின் களங்கங்கள் - வாழ்க்கையின் பரம்பரையாக தொடரும் துன்பங்கள்.
அந்த களங்களை போக்குவது வருங்கால வாழ்க்கையின் இன்பத்திற்கு அடித்தளம்.
கருமையத்தின் களங்கங்கள்:
நிறைவேறாத ஆசைகள், எண்ணம்/ சொல் / செயலில் பிணக்கு, பிறருக்கு நேரடியாகவோ / மறைமுகமாகவோ துன்பம் தருவது, பிறர் சுதந்திரம் / சொத்து அபகரித்தல், சீரமைக்காத அறு குணங்கள், பஞ்சமகா பாதகங்கள், அளவு முறை மீறிய செயல்கள், பெண்களுக்கு இழிவு / அநீதி / கொடுமை செய்தல், கரு வழி வந்த பாவங்கள், கெட்ட பழக்க வழக்கங்கள்.
கருமையத்தின் களங்கங்கள் போக்க:
மனவளக்கலை பயிற்சிகள் செய்தல், அகத்தவம் / அகத்தாய்வு செய்தல், அறு குண சீரமைத்தல், ஐந்தொழுக்கப்பண்பாடு கடைப்பிடித்தல், பிரம்ம ஞானம் தெளிதல், தொண்டு / தியாகம் செய்தல் இருக்கும் மனம் - கருமையத்தின் மனம்.
கரு மையத்தின் களங்கம் போக்கி மனத்துய்மை செய்வோம். மனத்தூய்மை, வினைத்தூய்மைக்கு வித்து. அதுவே இன்ப வாழ்வின் சொத்து.