1
பிரபஞ்சம் இயக்க களம்.
அதில் வாழும் நாம், உடல், உயிர், மனம் கொண்டு இயங்குகிறோம்.
இயக்கமே வாழ்க்கை.
இதில் தானே இயங்குவதற்கு பெயர் இயற்கை/விதி.
விரும்பி இயக்குவதற்கு பெயர் வினை/செயல்.
இந்த இரண்டின் கூட்டே விளைவு.
இவ்விளைவுகள் இன்பம் தர வேண்டுமா அல்லது துன்பம் தர வேண்டுமா என்பது உங்கள் முடிவு.
வினைகள் = ஆறு புலன்களால் செய்வது. ( எண்ணம், சொல், செயல்)
விளைவுகள் = இன்ப, துன்பமாக உணர்வது / பெறுவது / அடைவது.
எதிர்பார்த்தபடி வந்த விளைவுகள் இன்பமும், மாறான விளைவுகள் துன்பமும் தருகின்றன.
மாறான விளைவுகள் வரும் போது, மனிதன் சிந்தித்து வினை மாற்றம் செய்கிறான். இப்படிப்பட்ட சிந்தனையின் விளக்கம் தான் நல்வினை/தீவினை - ஒழுக்கம்.
நல்வினை = துன்பம் தராத, துன்பம் போக்கும், இன்பம் தரும் செயல்
தீவினை = துன்பம் தரும், துன்பம் கூட்டும், இன்பம் தராத செயல்
ஆகவே, விளைவறிந்த விழிப்பு நிலையிலே வினையாற்றுவது துன்பம் தவிர்க்கவும், இன்பம் சேர்க்கவும் உதவுகிறது.
சொல்லால் மட்டும் நம்பாதே, சுயமாய் சிந்தித்தே தெளிவாய் - வேதாத்திரி மகரிஷி
- 2
வினையாற்றல் = நான் செய்வது;
இயற்கையாற்றல் = இறை செய்வது
(வினையாற்றல் + இயற்கையாற்றல்) = விளைவு.
விளைவறிந்த விழிப்பு நிலை = இறை நீதியறிந்து உணர்ந்து நன்றியோடு தன் வினையாற்றுவது தான் கர்ம யோகம்.
கர்மம் என்றால் வினை;
யோகம் என்றால் இறைவனோடு இணைவது. இறைவனை
அடையும் பாதையை நோக்கிய பயணம் தான் கர்மயோகம்.
10 கர்மயோக நெறிகள்:
1. தாய், தந்தை, குரு, அரசு, தெய்வம் வணங்குதல்
2. எங்கும் நிறை இறைநிலை உணர்தல்.
3. எண்ணம், சொல், செயலால் துன்பம் விளைவிக்காமை
4. ஐந்தில் அளவு முறை - உணவு, உழைப்பு, ஓய்வு, உடலுறவு, எண்ணம்
5. ஒழுக்கம், கடமை, ஈகை இணைந்த அற நெறி வாழ்க்கை
6. ஐவகை கடமை ஆற்றல் - தான், குடும்பம், சுற்றம், ஊர், உலகு
7. சமுதாய தொண்டு
8. பெண்ணின் பெருமை போற்றும் செயல்
9. ஈதல் - ஒரு சதவிகித வருமானம்
10. களங்கங்கள் போக அகத்தவமாற்றல்