Monday, September 9, 2013

கிராம சேவை திட்டத்தில் வழியான்பட்டி (முள்ளூர் )

                                                  வாழ்க வளமுடன்!           


உலக சமுதாய சேவா சங்கத்தின் கிராம சேவை திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டம் முள்ளூர் பஞ்சாயத்தில் உள்ள வழியான்பட்டி கிராமம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பெரு  முயற்சி எடுத்த திருச்சி மண்டல தலைவர் அருள்நிதி  மாலா அம்மா அவகளுக்கு நன்றி தெரிவித்துக்   கொள்கின்றோம்.

வருகின்ற 17/09/2013 செவ்வாய் கிழமை மாலை 5.00 மணி முதல் 7.30 மணி வரை நடைபெற உள்ள திட்ட துவக்க விழாவில் உலக சமுதாய சேவா சங்க தலைவர் அருள்நிதி பத்மஸ்ரீ S.K.M. மயிலானந்தம் அய்யா அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற இருக்கின்றார்கள் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்றோம் .

புதுக்கோட்டை மாவட்டத்தைச்  சேர்ந்த அனைத்துநிலை மனவளக்கலை அன்பர்கள், தன்னார்வத் தொண்டர்கள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க  அன்போடு அழைக்கின்றோம் . வாரீர்!!! வாரீர்!!!

அழைப்பின் மகிழ்வில் ,
உலக சமுதாய சேவா சங்கம் -  திருச்சி மண்டலம்
மற்றும்

புதுக்கோட்டை மாவட்ட மனவளக்கலை மன்ற அறக்க்கட்டளைகள் 



வாழ்க வளமுடன்!